அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அமெரிக்கா பறந்துவிடலமா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கல்வியாற்றலிலும், நிர்வாக திறமையிலும் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரது நேரம் சரியில்லை. அவரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்பட்டது.

ஆனால் அந்த துறையில் அவர் எதிர்பார்த்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேலை செய்வதில் சலிப்புடன் இருக்கும் அவர் ஏன் இப்படி கூண்டுக்கிளியாக கஷ்டப்படணும். மீண்டும் அமெரிக்கா சென்று சுதந்திர பறவையாக இருக்கலாமே என்று யோசிக்கிறாராம். கிளி பறந்தாலும் பறந்து விடும் என்கிறார்கள். ராஜினாமா செய்யும் பட்சத்தில் மதுரையில் இடைத்தேர்தல் வரும்.

உங்களால் ஒரு இடைத்தேர்தல் வந்தால் அரசியலை தாண்டி மக்கள் மத்தியிலும் கெட்ட பெயர் வருமே என்று அவரது நலம் விரும்பிகள் கூறியதால் தான் யோசித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

உண்மைதான் தற்போதைய அரசியல் களத்தில் உண்மையானவர்களும், நேர்மையானவர்களும் நிலைத்து நிற்பது கடினம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal