கள்ளக்காதலனுக்கு ஆபாச படம் போட்டுக் காண்பித்து, கள்ளக்காதலி தனது தாயுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மாடசாமி. வேலைக்குச் செல்லாமல் இவர் அந்தப் பகுதியிலேயே தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் திடீரென இவர் மாயமாகியுள்ளார். எங்காவது சென்றிருப்பார் சில நாட்களில் திரும்பிவிடுவார் என்றே குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் முதலில் நினைத்துள்ளனர்.
இருப்பினும், சில நாட்கள் ஆன பிறகும் அவர் வீடு திரும்பாமல் போகவே கவலையடைந்த குடும்பத்தினர், பக்கத்தில் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடியுள்ளனர். இருப்பினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மாடசாமியின் பெற்றோர் மாயமான தங்கள் மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி இலத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். போலீசார் விசாரணையில் மாடசாமியை கண்டுபிடிகக முடியவில்லை.
இதையடுத்து ஒரு பக்கம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில், அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பவரது வீட்டில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு, லட்சுமணன் வீட்டில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த அதைத் திறந்துள்ளனர். அப்போது உள்ளே எலும்புக் கூடு இருந்ததைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அலறிவிட்டனர். இதையடுத்து உடனடியாக இது குறித்து போலீசாரிடம் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த எலும்புக்கூட்டை ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது தான் அது மாடசாமியின் உடல் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொன்றது யார் என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்தச் சூழலில் மாசடாமியை கொன்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (28), அவரது தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கோவையில் இருந்த நிலையில், அங்கே விரைந்து சென்ற இலத்தூர் போலீசார் அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த ஓராண்டு முன்பு மாடசாமிக்கும் பேச்சியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நெருக்கமான உறவாகவும் மாறியுள்ளது. பேச்சியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள போதிலும், மாடசாமியுடன் நெருங்கிப் பழகி வந்தார். பல நேரங்களில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மாடசாமி பேச்சியம்மாளுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கடுப்பான பேச்சியம்மாள் கள்ள உறவை முடித்துக் கொள்ளலாம் என்றும் தன்னை விட்டுச் செல்லும்படியும் கூறியுள்ளார். இருப்பினும், இதைக் கேட்காத மாடசாமி தொடர்ந்து பாலியல் ரீயாக அத்துமீறியுள்ளார். மாடசாமியின் பாலியல் தொல்லை தொடர்ந்து எல்லை மீறிப் போகவே அவரை கொலை செய்யும் முடிவுக்கு பேச்சியம்மாள் வந்துள்ளார்.
மாடசாமிக்கு எப்போதும் ஒரு பழக்கம் இருந்துள்ளது. அதாவது ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு வந்து அதேபோல உடலுறவு கொள்ள வேண்டும் எனத் தொல்லை செய்வாராம். கடந்த அக்டோபர் மாதம் மாடசாமியை வீட்டுக்கு வரவழைத்த பேச்சியம்மாள், ஆபாசப் படங்களில் வருவதைப் போலக் கட்டிப் போட்டு உடலுறவு கொள்ள ஆசையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட மாடசாமியும் இதற்கு ஓகே சொல்லியுள்ளார். மாடசாமியைக் கட்டிலில் கட்டிப்போட்டுள்ளார் பேச்சியம்மாள். இதுதான் சரியான சமயம் என உணர்ந்த பேச்சியம்மாள் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தாய் மற்றும் தம்பி உதவியுடன் லட்சுமணன் வீட்டின் அருகே இருந்த கழிவுநீர் தொட்டியில் போட்டுள்ளனர். அதன் பின்னர் கொஞ்சக் காலத்தில் வீட்டையும் காலி செய்து கோவைக்கு வந்துவிட்டார்களாம். சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆனதால், எஸ்கேப் ஆகிவிட்டோம் என நினைத்த போது தான் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.