அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று காலை சேலத்தில் இருந்து சென்னை வருவதாக இருந்த எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அவர் சென்னை வராததற்கு காரணம் ஏதும் சொல்லப்படாத சூழலில், அமித்ஷாவை அவர் சந்திக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதற்கான காரணம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சென்னை வரவிருக்கும் அமித் ஷா கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதே சமயம் இ.பி.எஸ். & ஓ.பி.எஸ். இருவரையும் தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சேலத்திலேயே தங்கியிருக்கிறார்.

காரணம், அ.தி.மு.க.வில் 95 சதவீதத்திற்கும் மேலான ஆதரவை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியை அமித் ஷா சந்திக்கலாம். அதே சமயம், ஓரிரு நிர்வாகிகளை வைத்திருக்கும் ஓ.பி.எஸ்.ஸை அமித் ஷா சந்திப்பதை எடப்பாடி தரப்பு விரும்பவில்லை. ஓ-.பி.எஸ். & இ.பி.எஸ். இருவரையும் ‘மேலிடம்’ சமமாக பார்ப்பதையும் எடப்பாடி தரப்பு விரும்பவில்லை’’ என்று காரணத்தை கூறினார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal