ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுக்க நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மற்றும் தி.முக. கட்சி சார்பில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் ரெயில் விபத்து காரணமாக, சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி நினைவிடம் மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal