அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வரை சந்தித்து அடுத்த மூவ் மற்றும் விளக்கம் கொடுக்க தயாராகி வருகிறாராம் செந்தில் பாலாஜி!

ஐந்து நாளாக நடந்து வந்த செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களின் ரெய்டு நேற்று முடிவிற்கு வந்தது. இந்த ரெய்டு தொடர்பாக விரைவில் வருமான வரித்துறை அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ரெய்டு தொடர்பாக வழக்குகள் பதியப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ரெய்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை,. இது போன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிதல்ல.

எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.ஆனாலும் வருமான வரித்துறை இந்த ரெய்டிற்கான காரணம் குறித்து முறையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.

நேற்று இரவு வரை கூட கிட்டத்தட்ட 200 இடங்களில் ரெய்டு நடக்கிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. 5 நாட்களாக நடந்த சோதனை நேற்றுதான் நிறைவு பெற்றது. இந்த ரெய்டு தொடர்பாக முக்கியமான விவரங்களை விரைவில் வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு நெருக்கமான இடங்களில் நடந்த ரெய்டு குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

ரெய்டு நடத்தப்பட்ட இடங்கள், சோதனை செய்தவர்கள் கேட்ட கேள்விகள், எடுக்கப்பட்ட ஃபைல்கள் போன்ற விவரங்களை முதல்வரை சந்தித்தப் பின் செந்தில் பாலாஜி வெளியிடுவார் எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal