தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இன்று (31.05.2023) சென்னை திரும்புகிறார்.

சென்னை, மீனம்பாக்கம், விமான நிலையம் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் (VIP Lounge) அருகில் இன்று (31.05.2023) புதன்கிழமை இரவு 09.00 மணியளவில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். தொழில் முதலீடுகள் குறித்தும் பேச இருக்கிறார். முன்னதாக, முதல்வருக்கு அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal