சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே பரமன்கேணி என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு பிரபல நடிகைக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது… இந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் உள்ளது.. அத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளது.

இந்த பங்களா வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார் நடிகை.. அதனால், ரிசார்ட் போல இதை பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், ஒருநாள் வாடகை என்பதுபோலதான் வசூலித்து வருகிறார்கள்.இப்படித்தான், ஒரு ஜோடி இந்த ரிசார்ட்டுக்கு சென்றுள்ளது.. சென்னையை சேர்ந்த அந்த இளைஞருக்கு 25 வயதாகிறது.. காதலியுடன் சென்றிருந்தார்.. தன்னுடன் நண்பர்களையும் அழைத்து சென்றுள்ளார்.. தனித்தனியாக 2 ரூம்களை எடுத்திருக்கிறார்கள்.. ஒரு ரூமில் காதல் ஜோடியும், மற்றொரு ரூமில், நண்பர்களும் தங்கியிருக்கிறார்கள்.. சம்பவத்தன்று மாலை இவர்கள் எல்லாருமே பக்கத்திலிருக்கும் பீச்சுக்கு சென்றிருக்கிறார்கள்.. பிறகு மறுபடியும், ரூமுக்கு திரும்பியுள்ளனர்..

அவர்கள் ரூமுக்கு தூங்க சென்றுவிட்டார்கள்.. இந்த ரிசார்ட்டை பொறுத்தவரை, ரூமுக்குள் நாம் தாழிட்டு கொண்டாலும், வெளியில் இருந்தும் கதவை திறக்க முடியுமாம்.. ஆனால், இந்த விஷயம் இங்கு வந்து தங்கும் நபர்கள் யாருக்கும் தெரியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறையை வைத்திருக்கிறார்களாம். காதல் ஜோடி ரூமில் தூங்கி கொண்டிருந்தார்கள்.. அப்போது நள்ளிரவு 2 மணி இருக்கும்.. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அந்த பெண்ணை யாரோ சீண்டுவது போல இருந்தது.

இதனால், திடுக்கிட்ட அந்த பெண் கண்விழித்துள்ளார். உடனே எழுந்து சென்று, விளக்கை போட்டால், அங்கு யாரோ ஒருவர் அந்த கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டார்.அந்த சத்தத்தை கேட்டு, காதலனும் எழுந்துவிட்டார்.. காதல் ஜோடிக்கு நடுவில் வந்து படுத்திருந்த அந்த நபர், அங்கிருந்து தப்பியோட முயன்றார்.. ஆனால், அங்கே தங்கியிருந்த நண்பர்கள் விரைந்து ஓடிவந்தனர்.. சுற்றிவளைத்து அந்த நபரை பிடித்து தாக்கினர்.. இறுதியில் போலீஸுக்கும் போனை போட்டு வரவழைத்துள்ளனர்.

போலீஸார் அந்த நபரை கைது செய்து, விசாரணையை துவங்கினர்.. அவர் பெயர் சுபாஷ்.. இதே ரிசார்ட்டில் ஊழியராக வேலை பார்ப்பவராம்.. இங்குள்ள ரூம்களை சுத்தம் செய்பவர் என்பது தெரியவந்தது.. அவரது செல்போனை போலீசார் வாங்கி சோதனையிட்டனர்.. அதில் பல பெண்களின் குளியலறை வீடியோக்கள் இருந்திருக்கின்றன.. இதுகுறித்து போலீஸார் சுபாஷிடமும் ரிசார்ட் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பண்ணை வீடு, காதல் பட நடிகை சந்தியாவுக்கு சொந்தமானது என்கிறார்கள்.. இவரது கணவர்தான் இந்த ரிசார்ட்டை நிர்வகித்து வருபவராம்.. தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal