தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில்தான் தமிழகதில் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்யும் என வானிலை மைய்யம் தெரிவித்திருக்கிறது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் 10 நாட்கள் உள்ளது. அனல் வெயில் பல ஊர்களில் வாட்டி வதைக்கிறது. சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.அக்னி வெயில் அனலை கக்கினாலும் ஆங்காங்கே குளிர்ச்சியூட்டும் வகையில் மழை பெய்து வருகிறது. பழனியில் கடந்த இரண்டுநாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பதால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது.

மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்றைய தினம் இடி மின்னல் சூறைக்காட்டுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal