ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியதை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ‘‘எடப்பாடியும் இந்திய விடுதலையும்’’ என்ற தலைப்பில் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுதான் எடப்பாடி தரப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘இந்திய விடுதலைக்கும் எடப்பாடிக்கும் என்ன சம்மந்தமோ அந்த அளவிற்கு தான் ஜல்லிக்கட்டு உரிமை மீட்டதில் எடப்பாடியின் பங்கு என்பதாகும்.

அதே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் நேதாஜிக்கு எந்த அளவுக்கு பங்கு உண்டோ அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்ததில் பச்சைத் தமிழன் பன்னீர் செல்வத்துக்கு பங்கு உண்டு என்பதை போடி முதல் மோடி வரை நாடு அறியும்.

இன்னும் சொல்லப் போனால் புறநானூற்று தமிழினத்தின் பண்பாட்டு பெருமையான ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டை மீட்டெடுத்து

ஒன்பது வருடங்களாக பூட்டிக்கிடந்த வாடிவாசல்களின் கதவு திறந்து விட்டது ஓ.பி.எஸ் என்கிற மூன்றெழுத்து மந்திரம் என்பது மாடுகளுக்கு கூட தெரியும்.

ஆனால் ஜெயக்குமார் போன்ற பொலிகாளைக்கு புரியாது போனதில் ஆச்சரியம் இல்லை தான்.

எனவே நாச்சியப்பன் பாத்திரக்கடையில் கோப்பையை வாங்கி அதில் எடப்பாடியின் பெயரை அச்சடிக்க குட்கா வியாபாரிகள் முயற்சிப்பது வெட்கக் கேடாகும்’’ என விளாசியிருக்கிறார் மருது அழுகுராஜ்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal