முக்குலத்தோர் வாக்குகள் பெரும்பான்மையாக அ.தி.மு.க.விற்குதான் விழும். சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் தி.மு.க. பெறும். ஆனால், அமைச்சரவை மாற்றத்தில் மீண்டும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுப்பதாக தி.மு.க.வில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயில் பதவியேற்ற தமிழக அரசு, மே 7 ஆம் தேதி 2 ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவிலான மாற்றம் என கூற முடியாது. அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டன. அடுத்து உதயநிதி ஸ்டாலின் புதியதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு அவருக்கு விளையாட்டு மேம்பாட்டு மற்றும் திட்டங்கள் செயலாக்கதுறை ஒதுகீட்டு செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை மாற்றத்தில் அடிப்படும் முதல் பெயர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவர் மீது ஏற்கனவே பல மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், கட்சி தலைவர் மற்றும் அவரின் குடும்பத்தை பற்றி பேசியதாக பாஜக வெளியிட்ட ஆடியோ அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆடியோ போலியானது என அவர் விளக்கம் அளித்திருந்தாலும், அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பெயர் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவரும் நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆவடி நாசர் துறையில் அண்மையில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தது. இது மாநில அளவில் பிரச்சனையாக உருவெடுத்தது மற்றும் உட்கட்சி விவகாரங்களால் அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வேங்கை வயல் பிரச்சனையின்போது துறை ரீதியாகவும் வேகமாக செயல்படாதது கட்சிக்கு ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்டப்பெயரை பெற்றுக் கொடுத்தது. அப்போது இருந்து அவர் மீது அதிருப்தியில் இருக்கும் முதலமைச்சர் அவருக்கு பதிலாக கயல்விழி செல்வராஜுக்கு பதிலாக தமிழரசிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.

டி.ஆர்.பாலு எம்.பி. தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கித்தரவேண்டும் என துடித்து வருகிறார். கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போதே எதிர்பார்த்தார், அது நடக்கவில்லை. தற்போதைய மாற்றத்தில் டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கிவிடுவார் டி.ஆர்.பாலு என்கின்றனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அமைச்சரைவயில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே 5&பேர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள். டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகும் பட்சத்தில் மூக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் அமைச்சர்களாகின்றனர். இந்த நிலையில் ஆவடி நாசர் உள்ளிட்டோரின் அமைச்சர் பதவி பறிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவருக்கு பதிலாக அதே சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சராக்கலாமே! ஏன் மேலும் மேலும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

தி.மு.க.வைப் பொறுத்தவரை கலைஞர் காலத்தில் இருந்தே சிறுபான்மையினருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். அ.தி.மு.க.விற்குதான் முக்குலத்தோர் மற்றும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் அ.தி.மு.க.விற்குதான் வாக்களிப்பார்கள். எனவே, தி.மு.க. வினரின் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை மாற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வினரின் கோரிக்கையாக இருக்கிறது’’ என்றனர்.

சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபிப்பாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal