அன்பில் மகேஷ் பொய்யாமொழி…. தனது பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழிக்கு ஏற்ப அனைவருடன் அன்புடன் பழகி, தன் பொறுப்பு வகிக்கும் மாவட்டத்தை தாண்டி, பிற மாவட்டங்களிலும் அன்பில் மகேஷுக்கு ஆதாரவாளர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

திருச்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் ஆதாரவாளர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்தில் உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் நீர்மோர் பந்தல் அமைத்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் அமைக்கும் ‘நீர்மோர் பந்தல்’ பெரும்பாலும் திறப்பு விழாவன்று மட்டுமே அங்கு மோரும், நீரும் கிடைக்கும். ஆனால், இங்கு அப்படியல்ல… காலையிலும்… மாலையிலும் படித்த இளைஞர்கள் நீர் மோர் இருக்கிறதா என ஆய்வு செய்கின்றனர்.

உப்பிலியபுரத்தைப் பொறுத்தளவில் ‘மகா விஷ்ணு’ அருண்குமார், நவீன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் தான் வருடந்தோறும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரது பிறந்த நாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவியுடன் கொண்டாடி வருகின்றனர்.

உப்பிலியபும் ஒன்றியத்தில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளரான அருண்குமாரிடம் பேசினோம்.

‘‘சார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆனைப்படி உதயநிதி ரசிகர்மன்றம் சார்பில் வருடந்தோறும் நீர்மோர் பந்தல் திறந்து வருகிறோம். உப்பிலியபுரம் ஒன்றியத்தில் நாங்கள் துடிப்புடன் செயல்பட முயற்சிக்கிறோம். ஆனால், இங்குள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் எங்களை செயல்படவிடாமல் தடுத்து வருகிறார். இவர் இதற்கு முன்பு மறைந்த வனத்துறை அமைச்சர் செல்வராஜின் ஆதரவாளராக இருந்தார். அதன் பிறகு பதவிக்காக அமைச்சர் நேருவிடம் அடைக்கலம் புகுந்துவிட்டார்.

நாங்கள் பதவியை எதிர்பார்க்க வில்லை… எங்களது கடமையை செய்து வருகிறோம்… அதற்காவது வழிவிடுங்கள் என்றுதான் தொடர்ந்து கேட்டுவருகிறோம்..!

கடந்தாண்டு, உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் பிறந்தநாளன்று, உப்பிலியபுரம் அண்ணாசிலையில் மிகப்பெரிய பேனர் ஒன்றை வைத்தோம். அந்த பேனரை இரவோடு இரவாக கழற்றி எடுத்து, யூனியன் ஆபிஸில் வைத்துவிட்டனர். இங்கு பெயரளவில்தான் இளைஞரணி செயல்பட்டு வருகிறது. எங்களைப் போன்றவர்களை ஊக்குவித்தால், கிராமப்புறங்களில் உதய சூரியனை உதிக்க வைப்பதில் எங்கள் பங்கு பெரிய அளவில் இருக்கும். எங்களுக்கு ஒரே ஒரு ஆசை அண்ணன் உதயநிதியையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் நேரில் பார்த்து எங்களது கோரிக்கைகளை வைக்க வேண்டும்’’ என்றனர்!

‘உங்களின் உழைப்பிற்கேற்ப பலன் கிடைக்கும்’ என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அதனால், உழைத்துக்கொண்டே இருங்கள்… ஒருநாள் உச்சத்திற்கு செல்வீர்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal