தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியலைப் பார்த்து தி.மு.க.வினரே திகைத்துப் போய் உள்ளனர். அ.தி.மு.க.வினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறார் அண்ணாமலை!

திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பல விஷயங்களை பற்றி பேசிய அண்ணாமலை, ‘‘தனது ரபேல் வாட்ச் சேரலாதன் ராமகிருஷ்னன் என்பவரிடம் இருந்து வாங்கியது என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த பேட்டியில் ஊழல் பற்றி பேசிய அண்ணாமலை, ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.

இது பார்ட் ஒன்றுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம். லோக்சபா தேர்தலுக்கு முன் இதை பற்றி எல்லாம் பேசுவோம். அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசுவோம். நீங்கள் நினைப்பீர்கள்.. அண்ணாமலை திமுக பற்றி மட்டும்தான் பேசுவார் என்று.

இல்லை அனைத்து ஊழல் பற்றியும் நாங்கள் பேசுவோம். 2024 தேர்தலுக்கு முன் எல்லோரையும் பற்றியும் பேசுவோம். ஊழல் பற்றி பேசுவோம் என்றால் எல்லாரையும் பற்றியும் பேசுவோம். ஒருவரை பற்றி மட்டும் பேசினால் நம்மை மக்கள் நம்ப மாட்டார்கள். உங்களை எதிர்க்க கூடாது என்றால் டெல்லி போய் அண்ணாமலையை பார்த்துவிட்டு வாருங்கள். அண்ணாமலை இருக்கும் வரை அனைவரின் ஊழலையும் பற்றி பேசுவேன்.

ஆட்சியில் இருந்த எல்லா கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவேன். அண்ணாமலை இருக்கும் வரை அதை தடுக்க முடியாது. இது ஊழலுக்கு எதிரான போராட்டம். திராணி இருப்பவர்.. தைரியம் இருப்பவர் போய் என்னை மாற்றுங்கள்.டெல்லிக்கு சென்று போய் பாருங்கள். இது மோடி ஜி விரும்பும் அரசு. இவர்களின் தயவில் எம்பி ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. 10 தேர்தலில் தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை, என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.

2024க்கு முன் ஆட்சியில் இருந்து அனைவரையும் பற்றி பேசுவேன் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். திமுக மட்டும் கிடையாது அனைத்து கட்சிகளும் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக என்கிறார் அண்ணாமலை. இது அதிமுகவுக்கு மிரட்டலா? என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இவர்களின் தயவில் எம்பி ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. 10 தேர்தலில் தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை, என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். இதனால் அதிமுகவை சுட்டிக்காட்டித்தான் அவர் பேசுகிறாரே என்று கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் கூட பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.

கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறிய நிலையில் இப்போது அனைவரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்’’ என்று கூறி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal