விமான நிறுவன ஊழியருக்கு, விபாச்சாரியுடன் ஏற்பட்ட பழக்கம், அவரது உடலை துண்டு துண்டுகளாக்கியது. இந்த அழகியின் அழகில் மங்கிய பூசாரியும் சிக்கியிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் ஜெயந்தன்(வயது29). இவர் சென்னை விமான நிலையத்தில் உள்ள தாய்லாந்து விமான நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி சொந்த ஊரான விழுப்புரத்துக்கு செல்வதாக சகோதரியிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார். இதில் விமான நிறுவன ஊழியர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த செம்மாளம்பட்டியில் உள்ள தனது காதலியான பாக்கியலட்சுமியை பார்க்க சென்றபோது அங்கு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமியை போலீசார் கைதுசெய்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. விபசார அழகியான பாக்கியலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் ஜெயந்தன் அவரை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து இருப்பதும் பின்னர் ஒரே ஆண்டில் அவர்கள் பிரிந்து சென்றதும் தெரிந்தது.

ஆனாலும் ஜெயந்தன், பாக்கியலட்சுமியை தொடர்ந்து குடும்பம் நடத்த அழைத்து உள்ளார். சம்பவத்தன்றும் ஜெயந்தன் காதலியான பாக்கியலட்சுமியை சந்திக்க சென்ற போது தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது பாக்கியலட்சுமி அதே பகுதியை சேர்ந்த நண்பரான சங்கர் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்து உள்ளார். பின்னர் ஜெயந்தன் உடலை துண்டு, துண்டாக வெட்டி எரித்து உள்ளனர். எரியாத உடல்பாகங்களை கட்டைப் பை மற்றும் சாக்கில் கட்டி 2 முறை கோவளம் பகுதிக்கு பாக்கியலட்சுமி எடுத்து வந்து உள்ளார்.

பின்னர் கோவளத்தை சேர்ந்த கோவில் பூசாரியான வேல்முருகனின் உதவியுடன் ஜெயந்தனின் எரிந்த தலை மற்றும் உடல் பாகத்தை மூட்டையில் கட்டி கோவளத்தில் உள்ள பூமிநாத கோவிலை ஒட்டிய குட்டையில் வீசி சென்று இருப்பது தெரிந்தது. இந்த கொலையில் தொடர்புடைய பாக்கியலட்சுமியின் நண்பர் சங்கர் மற்றும் கோவில் பூசாரி வேல்முருகன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே ஜெயந்தனின் உடல்பாகங்களை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். நேற்று மதியம் ஜெயந்தன் உடல் பாகங்கள் வீச்ப்பட்ட குட்டையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடினர். அப்போது ஒரு மூட்டையில் இருந்த 3 பிளாஸ்டிக் பைகளில் எரிந்த நிலையில் இருந்த ஜெயந்தனின் தலை மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. அதனை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயந்தனின் உடல் பாகங்கள் வீசப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக பாக்கியலட்சுமியை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து இருந்தனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கோவில் பூசாரி வேல்முருகன் போலீசார் விசாரணைக்கு சென்று விட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்து உள்ளது. கைதான பாக்கியலட்சுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவளத்தில் உள்ள சாமியார் வேல்முருகனை விசாரணைக்காக பழவந்தாங்கல் போலீசார் அழைத்து சென்று உள்ளனர். அப்போது சென்னைக்கு பாக்கியலட்சுமி வரும்போது தனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது அழகில் மயங்கி கொலைக்கு உதவினேன். என்னிடம் கொடுத்த ஜெயந்தனின் உடல் பாகத்தை குட்டையில் வீச யோசனை கூறினேன்.

உடலை மீட்க உதவி செய்வதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வேல்முருகனை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதன் பின்னர் வேல்முருகன் தலைமறைவாகி விட்டார். ஜெயந்தனின் உடல் குட்டையில் வீசப்பட்ட பிறகு சுமார் 20-வது நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு உள்ளது.

விபசார அழகியின் அழகில் மயங்கி கோவில் பூசாரியும் இந்த கொலைக்கு உதவி செய்து சிக்கி உள்ளார். தலைமறைவான பூசாரி வேல்முருகன் மற்றும் பாக்கியலட்சுமியின் நண்பர் சங்கர் ஆகியோரை பிடிக்க தென்சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சிக்கியதும் இந்த கொலையில் மேலும் பல பரபரப்பு தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் தற்போது கொலைவழக்கு பதிவு செய்து உள்ளனர். பழவந்தாங்கல், பொன்னமராவதி, கோவளம் என 3 போலீசாரும் இந்த வழக்கை விசாரித்ததால் கொலை வழக்கு பதிவது எந்த போலீஸ் நிலையம் என்பது இழுபறியாக இருந்தது.

தற்போது பழவந்தாங்கல் போலீசார் ஒரு மாதத்துக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான பாக்கியலட்சுமியை போலீசார் விசாரணை முடிந்து சிறையில் அடைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal