‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை…’ என்பார்கள். அரசியலில் அப்படி எந்தவொரு தலைவரையும் பார்க்க முடியாது. ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விட்டுக் கொடுப்பது, அனுசரித்துச் செல்வது ஆகியவற்றில் இருந்து இன்றும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்!

பாரத பிரதமர் நரேந்திர மோடியை பலமுறை சந்தித்த த.மா.கா. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், தனக்கென எதையும் கேட்காமல், தமிழக மக்கள் நலன் சார்ந்த தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகிறார். இந்த விஷயம்தான், ஜி.கே.வாசன் மீதான நம்பிக்கை பிரதமர் மோடிக்கு அதிகரிக்க காரணமானது.

அதே போல், சமீபத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால், அவர் தலைமையில் தமிழக காங்கிஸார் அணிவகுக்கத் தயாராக இருக்கிறோம்’ என்ற தொனியில் பேசினார். இப்படி எல்லோராலும் பாராட்டப்படுபவர்தான் ஜி.கே.வாசன்!

அ-.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜி.கே.வாசன், சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அந்த தொகுதியை அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்தார்! அதோடு, கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. வெற்றிபெற தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவந்தார்.

அ.தி.மு.க. சிதறிக் கிடக்கிறது என்று எல்லோரும் சொல்லி வந்த நிலையிலும், எடப்பாடி பழனிசாமிக்குத்தான் தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்தாரே தவிர, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் இருந்த ஒரே கூட்டணிக் கட்சித் தலைவர் என்றால் அது ஐயா ஜி.கே.வாசன்தான்.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு, முதன் முதலாக தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் ஜி.கே.வாசன்! அதன் தொடர்ச்சியாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில கலை அணித் தலைவர் மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், மாநில இளைஞரணிச் செயலாளர் யுவராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், ஜி.கே.வாசன் தலைமையில் எடப்பாடியாரை சந்தித்து வாழத்து தெரிவித்தனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal