பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பொன்.கந்தசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள், அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருந்தார்.

அதேபோல், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணனும் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பொன்.கந்தசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal