சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு ‘சொத்துக் குவிப்பு வழக்கு’ தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் வருமானத்துக்கு அதிகமாக எஸ்பி வேலுமணி சொத்து குவித்ததாகவும் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை ரத்து செய்ய மறுத்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தம் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்த மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்பி வேலுமணி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம். விசாரணைக்குப் பின்னர் வேலுமணியின் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இது எஸ்பி வேலுமணிக்கு பின்னடைவாகும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal