திருச்சியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, உப்பிலியபுரத்தில் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜ்!

துறையூர் முன்னாள் எம்.எல்.ஏ., இந்திரா காந்தியின் மகன் திருமண வரவேற்பிற்கு தம்மம்பட்டி, உப்பிலியபுரம், துறையூர் வழியாக திருச்சிக்கு நேற்று வருகை புரிந்தார் எடப்பாடியார். எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக உப்பிலியபுரத்திற்கு வருகை தர இருந்ததால், மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்து அசத்திவிட்டார்கள். ஏராளமான பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் பட்டாளம் ஆகியோர் பங்கேற்றனர்.

அழகாபுரி எம்.செல்வராஜ்

இந்த வரவேற்பு பற்றி உப்பியலிபுரம் பகுதியில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், ‘உப்பிலியபுரம் என்றாலே உப்பில்லாத ஊர்..’ என்று மறைந்த முதல்வர் கலைஞர் சொல்லுவார். காரணம், உப்பிலியபுரம் சட்டமன்றத் தொகுதி (தற்போது துறையூர் தொகுதி) அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. இதனால்தான் கலைஞர் எப்போதுமே உப்பிலியபுரத்தை உப்பில்லாத ஊர் என்பார். இதற்கிடையில் கடந்த இரண்டு முறை தி.மு.க. வெற்றி பெற்றது.

இனி துறையூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது. அதற்கு உப்பிலியபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சூளுரைத்து செயல்பட்டு வருகிறார் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி செல்வராஜ்! இந்த நிலையில்தான் முதன் முறையாக உப்பிலியபுரம் வழியாக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்து அசத்தியிருக்கிறார். மாலை 4.30 மணிக்கு எடப்பாடியர் வந்தாலும், மதியம் 2 மணி முதலே பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் எடப்பாடியாரை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த வரவேற்பை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு துறையூர் வழியாக திருச்சியில் நடக்கும் திருமண நிகழ்விற்கு சென்றார்! இனி உப்பிலியபுரம் பகுதி எடப்பாடியாரின் கோட்டைதான்’’ என்றனர்.

இந்த வரவேற்பை முடித்துவிட்டுக் காரில் கிளம்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘உப்பிலிபுரத்தில் சிறப்பான வரவேற்பை கொடுத்திருப்பது’ பற்றி பேசிக்கொண்டு, மிகவும் உற்சாகத்துடன் சென்றிருக்கிறார்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, என்.ஆர்.சிவபதி, பா.குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் ரத்தினவேலு, கிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் ரத்தினம் உள்பட ஏராளான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal