ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் கறுப்பு உடைஅணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அதே போல், தமிழக சட்டமன்றத்திலும் காங்கிரசார் கறுப்பு உடை அணிந்து வந்திருக்கின்றனர்.

பிரதமர் மோடி தொடர்பான விமர்சன வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வென்ற, வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கறுப்பு உடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதேபோல் ராகுல் எம்பி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லோக்சபாவில் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனர். மேலும் ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு தொடர்பாக விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal