சமீபத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால், அவர்தான் பொதுச் செயலாளர் என்பது உறுதியாகிவிட்டது.

இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற 23-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலாசென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை பட்டியலிடக் கோரி அவரது தரப்பு மூத்தவழக்கறிஞரான ஜி.ராஜகோபாலன், நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக நேற்று முறையீடு செய்தார். அதையேற்ற நீதிபதி இந்த வழக்கை நாளை மறுதினம் (மார்ச் 23) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal