அ.ம.மு.க. கூடாரத்தை திட்டம் போட்டு எடப்பாடி பழனிசாமி அப்படியே அலேக்காக தூக்கிவிட்டார். இதனால், டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியில் இருக்கிறார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதலில் டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக சசிகலா மற்றும் ஓபிஎஸ்யையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடியாக நீக்கியுள்ளனர். இதனையடுத்து ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் சட் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் பணியை தொடங்கியது.
அதில் எடப்பாடி பழனிசாமியை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஆனால் நீதிமன்றம் தேர்தல் முடிவு வெளியிட தடை விதித்துள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைந்து செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து டிடிவி தினகரன் அணியில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியாக அதிமுகவில் இணைக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொண்டுள்ளது. அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தனர்.
வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 12 பேர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது. கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ளி.ஷி. மணியன், வி.லி.கி., மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் ஷி. பவுன்ராஜ், சமீபத்தில் அமமுக-வில் இருந்து விலகி கழகத்தில் இணைந்த கோமல் அன்பரசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இது பற்றி அ.ம.மு.க.விலிருந்து விலகி சில சீனியர்களிடம் பேசினோம்.
‘‘சார், அ.தி.மு.க. உடைந்து கிடக்கிறது… உடைந்து கிடக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உடையவில்லை. ஓ.பி.எஸ். பக்கம், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரிட்டையர்டு ஆன பண்ருட்டியார் அவ்வளவுதான். டி.டி.வி.தினகரன் பக்கம் இருக்கும் மூத்த அரசியல் தலைவர் என்றால், அவர் ‘மலைக்கோட்டை மன்னன், அண்ணன் முன்னாள் கொறடா மனோகரன்தான். இவருக்கும் எடப்பாடி பழனிசாமி வலை விரித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், என்னவோ தெரியவில்லை சிக்கமாட்டேங்கிறார் மனோகரன்..!
ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. ஆகியோர் ஒன்றிணைந்த அ.தி.மு.க.வால்தான் தி.மு.க.வை எதிர்க்க முடியும் என்கிறார். ஆனால், இவர்களிடம் இருக்கும் ஒரு சிலர்தான் ஒன்றிணைந்த அ.தி.மு.க.வா? ஏனென்றால், டி.டி.வி.யும், ஓ-பி.எஸ்.ஸும், சசிகலாவும் தன்னை நாடி வந்தவர்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தெரியாமல், தி.மு.க.விற்கு ‘அனுப்பி’ வைத்துவிட்டனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, யாரேனும் ஆளும் தி.மு.க.விற்கு சென்றிருக்கிறார்களா… இல்லையே… அந்தளவிற்கு ஆளுடையுடன் எடப்பாடியார் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறார். இனியும் பி.ஜே.பி. போன்ற கட்சிகள், அ.தி.மு.க.வை ‘ஒட்ட வைக்கிறோம்’ என்று பேசிக்கொண்டிருக்காமல் இருந்தார் சரிதான்’’ என்றனர்.