‘எனது கனவில் கூட அமைச்சர் சேகர் பாபு திருமண நிகழ்ச்சிக்கு தேதி கேட்ட விஷயம் வந்தது’ என உதயநிதி கலகலப்பாக பேசினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு பற்றி பேசியதாவது:-

‘‘இவர் சேகர்பாபு அல்ல. செயல்பாபு என்று தலைவராலேயே பாராட்டப்பட்டவர். நான் சொல்வேன். இவர் வெறும் செயல்பாபு அல்ல. சூப்பர் செயல்பாபு. என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொள்வார். நான் நாமக்கல்லில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக ஒத்துக்கொண்டிருந்த அதே தேதியில் சென்னையில் ஒரு திருமண நிகழ்வுக்கு சேகர்பாபுவும் அழைத்து இருந்தார். அவரை சமாளித்து நாமக்கல்லுக்கு போவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

அந்த நிகழ்ச்சியை பற்றி பேசிய போதே ‘அப்படீன்னா மார்ச் 16 சென்னையில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. அதில் உங்கள் பெயரை போட்டுக்கொள்கிறேன் என்று போனிலேயே அடுத்த தேதியை வாங்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியக்கு எனது தாயாரை அனுப்பி வைத்தேன்.

அன்று முதல் எப்போது பார்த்தாலும் அண்ணே மார்ச்.16… அண்ணே மார்ச். 16 என்று நினைவுபடுத்திக் கொண்டே வந்தார். எனக்கு தூக்கத்தில் கூட மார்ச் 16 என்று சேகர்பாபு வர தொடங்கிவிட்டார். இப்போது சொன்னபடி நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் அவருக்கு நிம்மதி’’ என்று பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal