ஒரே இரவில் மூன்று முறை உடலுறவுக்கு வற்புறுத்திய காதலனை ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்ததாக கள்ளக்காதலி கொடுத்த வாக்குமூலம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

சென்னைபெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பிரகாஷ். திருமணமாகாத இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கும் சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற 41 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரியா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பிரியாவும் பிரகாஷும் அடிக்கடி விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 8ம் தேதி அன்று சென்னை பெரியமேடு ஆர்.எம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வழக்கம் போல அறை எடுத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்போது பிரகாஷ் திடீரென மயங்கி விழுந்து விட்டார் என பிரியா விடுதி மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து நிலையில், பிரகாஷ் உயிரிழந்த நிலையில் இருந்தார். அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை பிரியாவிடம் விசாரணை மேற்கொள்ள தொடங்கியது.

பிரியா தங்கள் உறவை பற்றி காவல்துறையிடம் கூறி, இது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தாக தெரிவித்துள்ளார். பிரகாஷ் தனது சேலையால் தூக்குப் போட்டு உயிரிழந்து விட்டதாகவும், தன்னால் தற்கொலை செய்து கொள்ள முடியவில்லை எனவும் கதறி அழுதுள்ளார். ஆனால், தூக்கு போட்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, பிரியா மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த நிலையில், அதில் பிரகாஷ் தலையின் பின்பக்கம் ஏற்பட்ட பலத்த காயம்தான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், உஷாரடைந்த போலீசார் பிரியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யவே உண்மை அம்பலமாகியுள்ளது. இறுதியாக பிரியா உண்மையை கூறி போலீசாரிடம் வாக்குமூலம் தந்தார். அதன்படி, சம்பவ தினத்தன்று இருவரும் மது அருந்திவிட்டு பகல் முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். இரவு 8 மணி அளவில் வீடு திரும்பலாம் என முடிவு செய்துள்ளார் பிரியா. அப்போது மீண்டும் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என பிரியாவிடம் பிரகாஷ் வற்புறுத்தியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக பிரகாஷ் தன்னை மீண்டும் மீண்டும் தொடர்ந்து உறவுக்கு அழைத்ததால் விரும்பமில்லை என பிரியா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்படவே, பிரியாவை பிரகாஷ் தாக்கி அடிக்கத் தொடங்கியுள்ளார். அப்போது அடிதாங்காமல் பிரியா தடுத்து, பலமாக பிடித்து கீழே தள்ளியுள்ளார். மல்லாக்க விழுந்து பிரகாஷ் கீழே விழ தலையில் அடிப்பட்டு மூச்சு பேச்சில்லாமல் ஆகிவிட்டார் என பிரியா வாக்குமூலம் தந்துள்ளார். தான் கொலை செய்ய நினைத்து கீழே தள்ளவில்லை. தகராறில் இந்த சம்பவம் நடைபெற்றதாக பிரியா கூறியுள்ளார்.

பிரியாவின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal