அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், ஓ.பி.எஸ். கூடாரம் காலியாக வருகிறது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பி.எஸ். வேட்பாளர் எடப்பாடியிடம் தஞ்சம் புகுந்தார்.

இந்த நிலையில்தான் திருநெல்வேலி மாவட்டம் ஓபிஎஸ் அணியில் நாங்குநேரியில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்தவர் சுந்தரராஜ்!

இவர் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை‌.என்.கணேசராஜா முன்னிலையில், அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து, தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். அணியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal