சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில், சில சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார்.

சென்னையில் தனியார் பேருந்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அளித்துள்ள விளக்கத்தில்,

‘‘ * சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது.

  • உலக வங்கி டெண்டர் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்க அறிக்கை கொடுக்க வேண்டும்.
  • தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசு பணியாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள்.
  • தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கவே திட்டமிடப்பட்டுள்ளது.
  • நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது.
  • அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது.
  • தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
  • தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசின் நகர பேருந்துகளில் வழங்கப்படும் சலுகைகள் தொடரும்.
  • தனியார் பேருந்து விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளும் அரசிற்கே உள்ளது.
  • போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
  • தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது. மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் நிறுத்தப்படாது.
  • சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
  • டீசல் விலை உயரும்போதெல்லாம் கர்நாடகா மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் எந்தவித கட்டண உயர்வுமின்றி பேருந்து சேவையை அரசு வழங்கி வருகிறது.
  • அ.தி.முக. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமே இந்த தனியார் பேருந்து சேவை திட்டமாகும்.
  • தனியார் பேருந்து எந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும், எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அரசே நிர்ணயம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal