எனக்கு எட்டு வயதிலேயே பாலியல் தொல்லை ஆரம்பமாவிட்டது’ என நடிகை குஷ்பு மனம் திறந்து பேசியிருப்பதுதான் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக பர்கா தத்துடன் ஒரு உரையாடலில் குஷ்பு பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

“ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பெண் அல்லது பையனைப் பற்றியது அல்ல. என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார்.

தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த மனிதன். எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு இருந்தது” என்று கூறி உள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்ததால், பல ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அம்மா என்னை நம்பவில்லை. ஆனால் 15 வயதில் அது போதும் என்று நினைத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தேன்.

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களிடம் இருந்த அனைத்தையும் அவர் எங்களிடம் விட்டுச் சென்றார். அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் என்னை சிறுவயதிலேயே மன உறுதியை படைத்தவளாக மாற்றியது என்று கூறினார் குஷ்பு. நடிகை குஷ்புவின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal