‘தமிழக அரசியல்’ இணையதளத்தில் ‘அன்பிலுக்கு எதிரான கே.என்.நேருவின் ஈரோடு கிழக்கு ஆபரேஷன் ஃபெயிலியர்’ என்று அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம். இன்றைக்கு அது நிஜம் என நிரூபணமாகியிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் இறந்தால், அந்ததொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் அமைச்சர்களுக்கு தலா சில வார்டுகள் ஒதுக்கப்பட்டது. தி.மு.க.வில் பழம் தின்று கொட்டைப் போட்ட அமைச்சர்கள்… தேர்தல் மற்றும் கல்லா கட்டுவதில் கில்லாடி அமைச்சர்கள் என பலர் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. மறுத்துவிடவும் முடியாது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இப்படி எல்லாவற்றிற்கும் ‘வல்லுநர்களாக’ இருக்கும் அமைச்சர்களுக்கு, கடும் போட்டியாக இருக்கும் வார்டுகளை ஒதுக்க வேண்டும். ஆனால், இளம் வயது மற்றும் முதன் முதலாக 2021&ல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, அ.தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் சில வார்டுகள் ஒதுக்கப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் மட்டும் அந்தந்த அமைச்சர்கள் பணியாற்றினால் போதும் என்ற நிலை இருந்தது. அந்த வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த அன்னை சத்யா நகர், சூரியம்பாளையத்தை உள்ளடக்கிய 20, 21 22, 23 வது வார்டுகள் ஒதுக்கப்பட்டன.
அ.தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் இந்த வார்டுகள் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் சீனியர் அமைச்சர் ஒருவரின் ‘உள்ளடி வேலைகள்’ இருப்பதாக அப்போதே செய்திகள் வந்தன.
ஆனாலும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் யதார்த்த அரசியல், தீவிர களப் பிரச்சாரம் ஆகியவை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், அ.தி.மு.க.வின் செல்வாக்கு மிகுந்த வார்டு என்று கூறப்பட்டாலும், அன்பில் மகேஷ் களத்தில் இறங்கியப் பிறகு, அந்த வார்டுகள் தி.மு.க.வின் கோட்டையாக மாறிவிட்டது.
அதற்கு காரணம், அந்த பகுதிகளில் தனக்கென ஒரு தனி டீமை இறக்கிற சுறுசுறுப்பாகவும், மிகவும் நேர்த்தியாகவும் களப்பணியாற்றினார். அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, அதனை போக்குவதற்கான நடவடிக்கையிலும் இறங்கினார். விளைவு… அன்பிலுக்கு ஒதுக்கப்பட்ட, அ.தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லப்பட்ட வார்டுகளில் தி.மு.க. அதிக வாக்குகளை பெற்றது.
இதோ களநிலவரம்: –
வார்டு 15
பாகம் 20
தி மு க கூட்டணி 517
அதிமுக கூட்டணி 280
வித்தியாசம் 237
பாகம் 21
தி மு க கூட்டணி 314
அதிமுக கூட்டணி 73
வித்தியாசம் 241
பாகம் 22
தி மு க கூட்டணி 471
அதிமுக கூட்டணி 101
வித்தியாசம் 370
பாகம் 23
தி மு க கூட்டணி 411
அதிமுக கூட்டணி 142
வித்தியாசம் 269
தமிழக அரசியல் களத்தில், மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட, அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு மிகுந்த வார்டுகளில், அதிக வாக்குகளை பெற்று முதல்வரின் பெயருக்கு மென்மேலும் பெருமை சேர்த்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!