ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால், அ.தி.மு.க. டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் உள்ளார்.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்பொழுது பிற்பகல் 3.15 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 28637 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 4062 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 605 வாக்குகளும் பெற்றுள்ளனர். டெபாசிட் பெற 28,365 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal