இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு விவகரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்திருக்கிறது!

பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலிஜியம் போன்ற பாரபட்சமில்லாத புதிய குழு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களையும் தலைமை தேர்தல் ஆணையரையும் நியமிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரைஷி, ‘‘கடைசியாக உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இரண்டு தசாப்தங்களாக நிலுவையில் இருந்த கோரிக்கை இது. இது தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான செயல்பாட்டுக்கு நன்மை பயக்கும்’’ எனக் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களில்,

‘‘பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான இந்த நடைமுறை நீக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டும்’’ என்கிற இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal