பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.விற்கு திருமாவளவனும் விரைவில் ‘அல்வா’ கொடுக்கப் போவதாக தகவல்கள் கசிகிறது.

இது பற்றி மூத்த அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘பணம் மற்றும் படை பலத்தால் அ.தி.மு.க.வை கைப்பற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்தபோது, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதன் முதலாக எடப்பாடி பழனிசாமிக்கு வாழத்துக் கூறினார். அதன் பிறகு, பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்க வேண்டாம் என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. அப்படி தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அக்கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய வாப்புண்டு!

நேற்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த தருணத்தில், வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க.விற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் திருமாவளவன். உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த விவகாரம் திருமாவுக்கும் பிடிக்கவில்லை! காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை.

அதே சமயம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை கழற்றிவிட்டு, காங்கிரசுடன் கைகோர்க்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துவிட்டார். இதற்கான வேலைகளை கடந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த சுனில் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்! ஆக, மொத்தத்தில் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.விற்கு திருமாவளவனும் அல்வா கிண்ட தயாராகிவிட்டார்கள்’’ என்றார்.

எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கணக்குகள் மாறும் என்பதில் சந்தேகமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal