முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருவதால் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் விழா இன்று தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான இடங்களில் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகளை கொடுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள அந்த விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் என அகில இந்திய அளவில் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில்தான் இளைஞரணி மாநிலச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துள் வாழ்த்தில், ‘‘முத்தமிழறிஞர் நீட்சியாக, சிந்தனை & சொல் & செயலில் திராவிட இயக்க கொள்கை தாங்கி, மிசா சிறை – இளைஞரணி – கழகம் – தமிழ்நாடு என அரை நூற்றாண்டுக்கு மேலான பொதுவாழ்வில் மக்கள் பணியாற்றும் தலைவர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தி.மு.க. இளைஞரணி சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.

அதே போல், தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், இளைஞரணி மாநிலச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வின் இலட்சிய கொடியேந்தி வீறு நடை போடுவது போல் தத்ரூப நினைவு பரிசினை முதல்வருக்கு வழங்கி வாழ்த்துப் பெற்றிருக்கிறார். அப்பொழுது தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் ஜோயல் கொடுத்த பிறந்த நாள் பரிசு முதல்வரை மட்டுமின்றி அரங்கில் இருந்தவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal