தமிழ்நாட்டில் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் மையங்கள் போன்றவற்றில் காவல்துறையினர் சோதனை நடத்துவதும், அங்கு விபச்சாரம் நடப்பதாக கூறி வழக்குகள் பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடைபெற்று வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அதனை ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பணம் நேரடியாக வாங்காமல் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து மிகவும் ரகசியமாக விபசார தொழில் நடைபெற்று வருவதை விபசார தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.
இதனையடுத்து அழகு நிலையத்துக்கு காவல்துறை ஆய்வாளர் பிரபு மாறு வேடத்தில் சென்றார். அப்போது, அங்கு இருந்த வாலிபர் ஒருவர் முன்பதிவு செய்த நம்பரை சொல்லுங்கள் என காவல் ஆய்வாளர் பிரபுவிடம் கேட்டு மாட்டி கொண்டார். இதனையடுத்து அந்த அழகு நிலையத்தில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார் அங்குள்ள அறையில் மாடல் உடையில் இருந்த மணிப்பூர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள், சென்னையை சேர்ந்த 3 பெண்கள் என 5 பேரை மீட்டனர்.
இதனை தொடர்ந்து தர்மபுரியை சேந்த அருள் என்ற 22 வயது இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் பூந்தமல்லை அடுத்த காட்டுப்பாக்கம், குமணன்சாவடி குன்றத்தூர் மெயின் ரோடு, போரூர் உள்ளிட்ட இடத்தில் விபச்சாரம் நடத்தியதாக 5 பேரை கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.