தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டர்களுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியிருக்கிறார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று (24.02.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு , – இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal