நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் கடைசியாக நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடவில்லை. அடுத்தாததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போதைய இளம் நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, மாடலாக இருந்து பின்னர்… தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய, ‘முகமூடி’ படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
மிகப்பெரிய பொருட்செலவில் நடிகர் ஜீவா, நரேன் நடிப்பில் வெளியான இப்படம் படு தோல்வியை சந்தித்தது. பூஜா ஹெக்டே நடித்த படமே தோல்விப்படமாக அமைந்ததால், ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே கண்டுகொள்ளப்படாத நடிகையாக மாறினார்.
தமிழ் திரையுலகம் கை கொடுக்கவில்லை என்றாலும், பூஜா ஹெக்டேவின் கவர்ச்சிக்காக தாங்கி பிடித்தது தெலுங்கு திரை திரையுலகம். ஆரம்பத்தில், தெலுங்கு திரையுலகின் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கிய இவர், அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றதால் முன்னணி ஹீரோயினாக மாறினார். அதே போல் பாலிவுட் திரையுலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள பூஜா ஹெக்டே தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார்.
கடைசியாக பூஜா ஹெக்டே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த, ‘பீஸ்ட்’ திரைப்படம் படு தோல்வியை அடைந்த நிலையில், தற்போது இவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் மற்றும் யாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி பையா படத்தின் 2 ஆம் பாகமாக எடுக்க உள்ள, படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ள தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக பூஜா நடிக்க உள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை தற்போது பரபரப்பாக நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.