ஈரோடு மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் பா.மு.முபாரக் தலைமையில் கடந்த 22&ந்தேதி நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, எஸ்.ரகுபதி, செஞ்சி மஸ்தான், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அரசு கொறடாவும், நீலகிரி மாவட்ட செயலாளருமான பா.மு.முபாரக் ஆகியோர் கலந்துகொண்டு சமுதாய தலைவர்களிடம் ஆதரவு கோரினர்.

கூட்டத்தில் ஈரோடு இடை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை மகத்தான வெற்றி பெற செய்வது என முடிவுசெய்யப்பட்டது.

உடன் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மணப்பாறை எம்.எல்.ஏ., அப்துல் சமது, நீலகிரி மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார், மாவட்ட பொருளாளர் ஏ.நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் இ.எம்.ராம்குமார், குன்னூர் நகரமன்ற துணை தலைவர் பா.மு.வாசிம் ராஜா, தலைமை கழக பேச்சாளர் அ.ஜாகீர் உசேன் உட்பட கழக நிர்வாகிகள் இருந்தனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணிகளில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு 36-வார்டு ஒதுக்கபட்டுள்ளது. இவர்கள் கோட்டை பகுதியில் பணிமனை அமைத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி அவர் பேசும் போது முபாரக்கிடம் கட்சிப் பணி, ஆட்சி பணி எதை கொடுத்தாலும் சிறப்பாக செய்துமுடிப்பார் என கூறுவதுண்டு. அதன்படி இந்த ஈரோடு இடைதேர்தலில் அவருக்கு சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்று தரும் “அசைன்மென்ட்” கொடுக்கபட்டுள்ளது.

முன்னாள் அரசு கொறடாவும் மாவட்ட செயலாளருமான பா.மு.முபாரக் கடந்த 25 நாட்களாக ஈரோட்டில் முகாமிட்டு நிர்வாகிகளோடு தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

மேலும் ஈரோடு பள்ளிவாசல் முத்துவலிகள், ஹாஜி முகமது அலி, ஹாஜி உசேன் அலி, ஈரோடு ஹாஜி எஸ்.எம் இப்ராஹிம், ஹாஜி எஸ்.எம்.ஈசாக், ஆகியோரை அவர்களது வீடுகளுக்கு தேடி சென்று ஆதரவு திரட்டி சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கேட்கிறார். இதுதவிர இஸ்லாமிய பெண்களிடம் கூட்டம் போட்டு பேசி வாக்குகள் சேகரித்து வருகிறார்
.
அவரை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal