உடலுறவுக்கு மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பாக தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34). இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். சீனிவாசனும் அம்முவும் 2008 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அம்முவுக்கு தனது உறவினர் சரவணனுடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இருவரும் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து வெளியிடங்களுக்கு செல்வதை சீனிவாசன் கண்டித்துள்ளார். ஆனாலும் மனைவி அம்மு கேட்டதாக தெரியவில்லை.

கணவரின் சொல்லை கேட்காமல் தனது உறவினருடன் அம்முவுக்கு கள்ளத்தொடர்பு தொடர்ந்ததாம். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் உறவு கொள்ள சீனிவாசனை அம்மு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அம்மு வர மறுத்து கையை தட்டி விட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. “என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டாய், பிறகு ஏன் என்னுடன் உறவுக்கு வர மறுக்கிறாய்” என சீனிவாசன் கேட்டுள்ளார்.

அதற்கு அம்முவோ என்னால் உன்னுடன் உறவு கொள்ள முடியாது. எனக்கு யாரை பிடிக்குமோ அவருடன் மட்டுமே உறவு கொள்வேன். அந்த வகையில் எனக்கு என்னுடைய சொந்தக்கார பையனைத்தான் பிடித்திருக்கிறது என அம்மு கூறியுள்ளார். இதனால் சீனிவாசனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அந்த கள்ள உறவை விட்டுவிட்டு நமக்கு குழந்தை இருக்கிறது என சீனிவாசன் எத்தனையோ முறை கூறியும் அம்மு பிடிவாதமாக கேட்கவில்லை.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சீனிவாசன் கத்தியை எடுத்து அம்முவை குத்தி கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அம்மு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசனின் வழக்கறிஞர் கூறுகையில் இந்த செயல் திட்டமிட்ட கொலை அல்ல. எனது கட்சிக்காரரை அம்மு ஆத்திரமூட்டியதன் காரணமாக நடந்தது என வாதம் செய்தார். இதை கேட்ட நீதிபதி முகமது பாரூக் குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு தண்டனை விவரங்களை படித்தார். நீதிபதி கூறுகையில் கோபத்தின் காரணமாக சீனிவாசன் அம்முவை கொலை செய்துள்ளார்

மேலும் பாலியல் உறவுக்கு ஒத்துழைப்பு தர மறுத்து சீனிவாசனை கீழே தள்ளிவிட்டுள்ளார். தன்னுடைய உறவினர் மகனுடன் மட்டுமே உறவு கொள்ள முடியும் என அம்மு கூறியதால் சீனிவாசன் ஆத்திரமடைந்துள்ளார். எனவே இது திட்டமிட்டு நடந்த கொலை அல்ல. எனவே சீனிவாசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன் என தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 8 வயது மகன் (தற்போது 12 வயது) கூறுகையில் தனது தந்தை தாய் அம்முவை கத்தியால் குத்தியதை பார்த்ததாகவும் தனது தாயின் உடலில் கொசு மருந்தை தந்தை தெளித்ததாகவும் கூறுகிறார். மற்றபடி சரவணன் என்ற வேறு ஒரு உறவினருடனான உறவு குறித்து அந்த சிறுவன் எதையும் கூறவில்லை. இதையடுத்து அந்த குழந்தை அடைந்த மனவேதனைக்கும் தாயாரின் இழப்பும் போதுமான இழப்பீட்டை தருமாறு நீதிபதி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal