ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக தொடர்நது குற்றம்சாட்டி வருகிறது. இது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கடந்த 13-ஆம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார்.

அதில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுளா 40 ஆயிரம் பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கவில்லை எனவும் சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அளித்த புகார் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி முறைகேடு தொடர்பாக உரிய ஆய்வுகளை செய்து அறிக்கை அளிக்குமாறு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணிக்கு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி தாக்கல் செய்யும் அறிக்கையை, விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பி வைக்க உள்ளா

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal