ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என செங்கோட்டையின் கூறியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கைப் பொறுத்தளவில், ஆரம்பத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை தி.மு.க.விற்கு இருந்தது. தற்போது, அ.தி.மு.க.வில் பிளவு இல்லாமல் ஒரே ஒரு வேட்பாளர் களத்தில் நிற்பது தி.மு.க.விற்கு கொஞ்சம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

மேலும், தி.மு.க. அமைச்சர்கள் மக்களிடம் ஓட்டுக்கேட்க செல்லும்போது, ‘அடிப்படை வசதிகள் கூட ஈரோட்டிற்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. சாலைக்கூட சரியாக இல்லை பாருங்கள்’’ என்று கேட்டதோடு, ‘‘குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று வாக்குறுதிகள் கொடுத்தீர்கள் இரண்டு வருடங்கள் முடியப் போகும் நிலையில், அது பற்றி எந்தத் தகவலும் இல்லை. முதியோர் உதவித் தொகை வழங்குவதையும் பாதியாக குறைத்துவிட்டீர்கள்’’ என்று பெண்கள் நேரடியாகவே கேட்டதுதான் அமைச்சர்கள் அதிர்ச்சியடை வைத்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. குறிப்பாக பெண்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தேர்தல், ஜெயலலிதாவுக்கு மருங்காபுரி தேர்தல் போன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்பு முனையாக அமையும்.

இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும். எத்தனை தடை இருந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார். இது அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்று நிரந்தர முதலமைச்சர் ஆக உதவும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal