ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஐந்து நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபசுக்கான அவகாசங்கள் முடிந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர்.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகிய 4 பேர் களம் இறங்கி உள்ளனர். என்றாலும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி- அ.தி.மு.க. இடையே தான் நேரடி பலப்பரீட்சை ஏற்பட்டு இருக்கிறது. நேற்று வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனை ஆதரித்து கடைசி 2 நாட்கள், அதாவது 24, 25-ந் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது உத்தரவுக்கேற்ப தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இந்தநிலையில் அ.தி.மு.க.வும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இந்த 5 நாட்களில் 19 பொதுக்கூட்டங்களில் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கெங்கு சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார் என்கிற விவரம் வருமாறு:-

வீரப்பம்பாளையம் (பொதுக்கூட்டம்) வழி: விவேகானந்தா சாலை, கணபதி நகர் சாலை, வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தா சாலை, நாராயண வலசு, ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட் – ஈ பிளாக் – புறநகர், நியூ டீச்சர்ஸ் காலனி, திருமால் நகர் , டவர் லைன் காலனி, குமலன்குட்டை (மாரியம்மன் கோயில் அருகில்), செல்வம் நகர், முருகேசன் நகர், சரோஜினி நகர், திரு.வி.க. வீதி, டீச்சர்ஸ் காலனி, ஆட்சியர் அலுவலகம் சம்பத் நகர், காசியண்ணன் வீதி, ஆண்டவர் வீதி, காளியப்ப கவுண்டர் தோட்டம், ஹவுசிங் யூனிட். பெரியவலசு நால் ரோடு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

வள்ளியம்மை வீதி, பிரசாத் வீதி, லால்பகதூர் வீதி, வாய்க்கால்மேடு, இந்திரா நகர், ராதாகிருஷ்ணா வீதி, கொங்குநகர் 1, 2, சுப்பிரமணிய சிவா வீதி, கொத்துக்கார வீதி, ஔவையார் வீதி, சேக்கிழார் வீதி, ஜான்சி நகர், அப்பன் நகர், முனிசிபல் காலனி, மாணிக்கம் வீதி, கல்யாண விநாயகர் கோயில், பவளம் வீதி, சத்யா வீதி, நகராட்சி குடியிருப்பு பாலசுப்பிரமணிய நகர் லே அவுட், அண்ணாமலை லேஅவுட், சின்னமுத்து வீதி 1, 2, வாரணாசி வீதி. இடையன்காட்டுவலசு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பிரபா தியேட்டர், ராஜகணபதி விநாயகர் கோயில், சின்ன முத்து மெயின் வீதி, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப் ரோடு), கலைமகள் பள்ளி வழியாக எஸ்.கே.சி. ரோடு, பவர்ஹ வுஸ் வீதி, படேல் வீதி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர் ஆர்ச், காந்திஜி ரோடு, பன்னீர் செல்வம் பார்க். மணிக்கூண்டு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

ஈஸ்வரன் கோயில் வீதி, கொங்கலம்மன் வீதி, மஜீத் வீதி, எல்லை மாரியம்மன் கோயில், சக்தி மெயின் ரோடு, பேருந்து நிலையம், சத்தி மெயின் ரோடு, ஏபிடி ரோடு, சாந்தாங்காடு, அபிராமி வீதி, காந்திஜி வீதி, அண்ணாமலை நகர், ஜான்சி நகர், பாரதி வீதி, எம்.ஜி.ஆர். வீதி, குமரன் வீதி, தங்கவேல் வீதி, துரைசாமி வீதி, பாரதிதாசன் வீதி, திரு.வி.க. வீதி, ஐயர் காடு, வீரப்பன்சத்திரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). 16-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி அக்ரஹாரம் பகுதி.

அசோகபுரம் பகுதி, களிராவுத்தர் குளம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). தண்ணீர் பந்தல்பாளையம், காமராஜ் நகர், பூம்புகார் நகர், காட்டூர் வீதி, நஞ்சப்பா நகர். வண்டிப்பேட்டை (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). கான்வென்ட் ஸ்கூல், அன்னை சத்யா நகர். நெரிகல் மேடு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). கலைமகள் வீதி, லட்சுமி நகர், ராஜ வீதி, தீரன் சின்னமலை வீதி, கரிகாலன் வீதி, அதியமான் வீதி, பவானி மெயின் ரோடு, நெரிகல் மேடு, 16 மெயின் ரோடு. காவேரி ரோடு சின்ன மாரியம்மன் கோயில் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

நேரு வீதி, முருகன் வீதி, காவேரி ரோடு, தெப்பக்குளம், மாசிமலை வீதி, ஏ.பி.டி. ரோடு, சேரன், சோழன், பாண்டியன் வீதி, திருமலை வீதி, பெரியகுட்டை வீதி, பல்லவன் வீதி, காவேரி ரோடு, பவானி மெயின் ரோடு. வைராபாளையம் பள்ளிக்கூடம் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). மாரியம்மன் கோயில் வீதி, பள்ளிக்கூடம் வீதி, கந்தசாமி வீதி, நேதாஜி வீதி, பட்டேல் வீதி, ராஜ கணபதி நகர். கிருஷ்ணம்பாளையம் ஓங்காளியம்மன் கோயில் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

பச்சியம்மன் கோயில் வீதி, சொக்காய் தோட்டம், விநாயகர் கோயில் வீதி 1, அழகரசன் நகர், கணபதிபுரம், வண்டியூரான் கோயில் வீதி, ராஜகோபால் தோட்டம், கிருஷ்ணம்பாளையம் காலனி, சித்தன் நகர், ஜீவா நகர், கமலா நகர், கக்கன் நகர், ராமமூர்த்தி நகர், ராமசாமி நகர், மாதேஸ்வரன் கோயில் வீதி, பம்பிங் ஸ்டேஷன் ரோடு, மாதவ காடு, சாமியார் வீதி, ஓ.எம்.ஆர். காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.கே.வி. நகர், புதுமை காலனி, ஜெயகோ பால் வீதி, காமராஜர் பள்ளி. ராஜாஜிபுரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

பூங்குன்றனார் வீதி, காந்தி புரம், கந்தசாமி சந்து, கண்ணையன் வீதி, சாம்பகாடு, ரங்க வீதி, வீர வீதி, பிள்ளையார் கோயில் வீதி, சகன் வீதி, வரதப்பா வீதி, ஜானகி அம்மாள் லே அவுட், சுப்பையா வீதி, குரங்கு குட்டை, மில் வீதி. 17-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கருங்கல்பாளையம் பகுதி, பெரியார் நகர் பகுதி சுப்பிரமணியம் கோயில், காவேரி ரோடு ராஜகோபால் தோட்டம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

வண்டியூரான் கோயில், காமாட்சியம்மன் கோயில் வீதி. தேர்முட்டி (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). சின்ன மாரியம்மன் கோயில், அரசு இளங்கோ வீதி, பொன்னுசாமி வீதி, மரப்பாலம், மரப்பாலம் மெயின் ரோடு, பெரிய மாரியம்மன் கோயில் வீதி, ரங்கநாதன் வீதி, கற்பகம் லே அவுட். மோசிகீரனார் வீதி- 3 (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). மோசிகீரனார் வீதி 1. மாதவ கிருஷ்ணன் வீதி, மாரிமுத்து வீதி, அகத்தியர் வீதி. வி.வி.சி.ஆர். நகர் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). வளையக்கார வீதி, காடிகானா முக்கு, மகாஜனா மேல்நிலைப்பள்ளி, அர்பன் பேங்க், கச்சேரி வீதி, அருள்மொழி வீதி, நடராஜா தியேட்டர் ஹவுசிங் யூனிட், மரப்பாலம். சமாதானம்மாள் சத்திரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

பெரியார் நகர், காளைமாடு சிலை, டீசல் ஷெட், பெரிய தோட்டம் வழியாக கிரான்மடை பாலம் வீதி 1, 2,3, 4, தேவா வீதி, லட்சுமணன் வீதி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, மாரப்பன் வீதி 1,2, சூரம்பட்டி நால்ரோடு வழியாக பூசாரி சென்னிமலை வீதி, காந்தி நகர், பழனியப்பா வீதி.

24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு டீச்சர்ஸ் காலனி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால் ரோடு, பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங், தங்கப்பெருமாள் கோயில் வழியாக கள்ளுக்கடைமேடு. பழைய ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சமாதானம்மாள் சத்திரம், பேபி மருத்துவமனை வழியாக மரப்பாலம், மண்டப வீதி வழியாக காரை வாய்க்கால், வளையக்கார வீதி, இந்திரா நகர், கருங்கல்பாளையம், கோட்டையார் வீதி ரங்கநாதர் வீதி வழியாக, சின்ன மாரியம்மன் கோயில் மைதானம், காந்தி சிலை, மணிக்கூண்டு, சித்திக் திடல், அசோகபுரி, நேதாஜி ரோடு சென்ட்ரல் தியேட்டம், பன்னீர் செல்வம் பார்க். (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

25.2.2023- சனிக்கிழமை காலை வெட்டுக்காட்டுவலசு (19வது வார்டு), நாச்சாயி டீ கடை, சம்பத் நகர், பெரிய வலசு, குளம் – காந்தி நகர், அக்ரஹாரம் வண்டிப் பேட்டை, சத்யா நகர், நெரி கல்மேடு, வைரா பாளையம், கிருஷ்ணம்பா ளையம், கே.என்.கே.ரோடு, ராஜாஜி புரம், மெட்ராஸ் ஹோட்டல், எல்லை மாரியம்மன் கோயில், முத்துசாமி வீதி, பழனிமலைக் கவுண்டர் வீதி, தெப்பக்குளம், வீரப்பன்சத்திரம் (பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்). இவ்வாறு பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal