ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சைகளுக்காக 191 சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் ஆகியோர் கட்சி சின்னத்திலும், மற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு விட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் ஏராளமான சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். சுயேட்சைகளுக்காக தேர்தல் ஆணையம் 191 சின்னங்களை வெளியிட்டுள்ளது.
அதில் சீர்வளி சாதனம் (ஏர் கன்டிசனர்), அலமாரி, ஆட்டோ ரிக்ஷா, நடைவண்டி, பலூன், வளையல்கள், கிரிக்கெட் மட்டை, மட்டை மந்தடி வீரர் (பேட்ஸ்மேன்), மின்கல விளக்கு (பேட்டரி டார்ச்), மணியாரம் (பிட் நெக்ளஸ்), வார்ப்பட்டை (பெல்ட்), பென்ச், மிதிவண்டி காற்றடிக்கும் குழாய் (சைக்கிள் பம்ப்), இரட்டை தொலை நோக்காடி (பைனாகுலர்), பிஸ்கெட், கரும்பலகை, படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு, பெட்டி, ரொட்டி, ரொட்டி சுடும் கருவி, செங்கல், கைப்பெட்டி, பிரஸ், வாளி, கேக், கணக்கீட்டு பொறி (கால்குலேட்டர்), புகைப்பட கருவி (கேமரா), கொள்கலன். குடைமிளகாய்,
தரை விரிப்பு, கேரம் பலகை, காலிபிளவர், கண்காணிப்பு கேமரா, சங்கிலி, திருகைக்கால், காலணி, சதுரங்க பலகை, புகைப்போக்கி, கிளிப், கோட், தென்னந்தோப்பு, தூரிகையுடன் கூடிய வண்ண கலவை தட்டு, கணினி, கணினி சுட்டி (மவுஸ்), கட்டில், பாரந்தூக்கி, கனசதுரம், வெட்டுகிற சாதனம், வைரம், டீசல் பம்ப், டிஷ் ஆன்ட்டெனா, சிவிகை, அழைப்பு மணி, கதவு கைப்பிடி, துளையிடும் இயந்திரம், இரு முனைப்பளுக்கருவி, மின் கம்பம், உறை, மின் இணைப்புக்கான நீட்டிப்பு பலகை, புல்லாங்குழல், கால்பந்து, கால்பந்து வீரர், செயற்கை நீரூற்று,
சிறுமியர் சட்டை, வாணலி, புனல், கரும்பு, விவசாயி, வாயு சிலிண்டர், வாயு அடுப்பு. பரிசு பெட்டகம், இஞ்சி, கண்ணாடி டம்ளர், கிராமபோன், திராட்சை, பச்சை மிளகாய், தள்ளு வண்டி, ஆர்மோனியம், தொப்பி, ஹெட்போன், உலங்கு வானூர்தி, தலைக்கவசம், மட்டை பந்து, மணற்கடிகை, அமிழ்சுருள், இஸ்திரி பெட்டி, பலாப்பழம், கெண்டி, சமையலறை, கழிவு தொட்டி, வெண்டைக்காய், மகளிர் கைப்பை, மடிக்கணினி, தாழ்பாள், கடித பெட்டி, விளக்கேற்றி, பகடை, உணவு கலன், துரஹா ஊதும் மனிதம், தீப்பெட்டி, ஒலி வாங்கி, அரவை சாதனம், நகவெட்டி, டை, நூடுல்ஸ் கோப்பை, கடாய், கால் சட்டை. நிலக்கடலைகள், பட்டாணி, விரலி, ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை, பேனா தாங்கி, பென்சில் பெட்டி, பென்சிலை கூராக்கும் சாதனம், ஊசல், சிறு உரலும் உலக்கையும், பெட்ரோல் பம்ப், போன் சார்ஜர், தலையணை, அன்னாசி, கரணை, உணவு நிறைந்த தட்டு, தட்டுகள் வைக்கும் தாங்கி,
பானை, பிரஷர் குக்கர், துளைப்பான், மமிப்பான் (ரேசர்), குளிர்பதன பெட்டி, மோதிரம், சாலை உருளை, எந்தரன், அறை குளிர்விப்பான் (ரூம் கூலர்), அறை வெதுப்பான் (ரூம் ஹீட்டர்), ரப்பர் முத்திரை சன்னல், முறம், ஊசி மற்றும்நூல், குடிமக்கள், குப்பை தொட்டி ஆகிய 191 சின்னங்கள் ஒதுக்கி உள்ளனர்.
வேட்பு மனுக்கள் நாளை வாபஸ் பெறப்பட்டு மதியம் 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்பட்டியலில் வேட்பாளர் பெயர், அவர் சார்ந்த கட்சி பெயர் அல்லது சுயேட்சை என்ற விபரமும், அவருக்கான சின்னமும் வழங்கப்படும்.
ஒரே சின்னத்தை சில வேட்பாளர்கள் கோரினால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து வழங்குவர்.