பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 5 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சந்திராண குட்டா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பிறந்தநாளை ஆண் நண்பர்களுடன் கடந்த 4-ந் தேதி கொண்டாடினார். அப்போது அவரது காதலனும் உடன் இருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்த சிறுமியின் நண்பர்கள் 5 பேர் போதைபொருளை அதிக அளவில் சாப்பிட்டு போதையில் இருந்தனர்.

மேலும் அவர்கள் சிறுமியிடம் தங்களுக்கு உனது தோழி யாரையாவது இங்கே அழைத்து வர முடியுமா எனக் கேட்டுள்ளனர். அதன்படி சிறுமி வெளியே சென்றார். அப்போது அவரது நெருங்கிய தோழியான 16 வயது சிறுமி அவரது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக அருகில் உள்ள மருந்து கடைக்கு வந்திருந்தார். அவரிடம் சிறுமி நைசாக பேச்சு கொடுத்தார். எனது பிறந்தநாள் விழா நடக்கிறது. உடனே வர வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்தார். இதனை அடுத்து அவர்கள் கண்டிக்கல் கேட் பகுதியில் உள்ள பிறந்தநாள் கொண்டாடிய வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்றதும் தோழியை ஆண் நண்பர்கள் இருந்த அறையில் தள்ளி விட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி தனது காதலனுடன் மற்றொரு அறைக்கு சென்று விட்டார்.

அங்கு போதையின் உச்சத்தில் இருந்த 5 வாலிபர்களும் சேர்ந்து அறையில் தள்ளி விடப்பட்ட 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றினர். சிறுமி மயக்க நிலையில் இருந்தபோது 5 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். சிறுமி கூச்சலிட்டால் வெளியே சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக தங்களது அறையில் இருந்த ஒலிபெருக்கியில் சத்தமாக சினிமா பாடல் ஒலிபரப்பினர். சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரும் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். அதிகாலை 3 மணிக்கு சிறுமிக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவர் வீட்டிற்கு சென்று நடந்த கொடுமைகள் குறித்து தனது தாயாரிடம் கூறினார். இது குறித்து சந்திரநாக போலீசில் புகார் செய்தார். போலீசார் நடந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் தகவல்களை கேட்டறிந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி மற்றும் பலாத்காரம் செய்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான வாலிபர்கள் 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அவரது தோழி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal