பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கங்கனாவை, பாலிவுட்டில் சர்ச்சை நாயகி என்றே அழைத்து வருகின்றனர்.

பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் சோஷியல் மீடியாவில் படுஆக்டிவாக இருக்கும் கங்கனா ரனாவத் தொடர்ந்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வந்த காரணத்தால், அவரின் ட்விட்டர் கொள்கை விதிகளை மீறிய காரணத்தால் கடந்த 2021ம் ஆண்டு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டர் கணக்கு இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இன்று திருமணம் செய்யவிருக்கும் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண வீடியோவைப் பகிர்ந்து திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்த காதல் ஜோடி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சினிமா துறையில் உண்மையான காதலை பார்ப்பதே மிகவும் அரிதான ஒன்று. இவர்களை ஒன்றாக பார்ப்பதற்கு தெய்வீகமாக உள்ளது என்று பதிவிட்டு, தீய கண் ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் சினிமா துறையில் உண்மையான காதல் இல்லையா? என்றும் மறைமுகமாக பல பாலிவுட் நடிகர்களை தாக்கும் விதமாக பதிவு செய்துள்ளார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதையாவது சர்ச்சையாக பேசுவதையே கங்கனாவின் வாடிக்கையாகி விட்டது என சில பிரபலங்களும் அவர் மீது கடுப்பில் உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal