ரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எடப்பாடி அணி மீறியுள்ளதாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி முறையிட்ட நிலையில், இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் ஒரு வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்றும் அதற்க்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதற்கான நடவடிக்கையை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மேற்கொண்டு இருந்தார். இந்தநிலையில் அவைத்தலைவரின் நடவடிக்கை ஒரு தலைபட்சமாக இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் தரப்பு வேட்பாளரின் பெயரை குறிப்பிடாமல் தென்னரசு பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கும் முறைப்படி கடிதம் அனுப்பவில்லையென்றும், அவர்களாகவே சுற்றறிக்கையில் கையெழுத்திட்டுக்கொண்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் பன்ருட்டி ராமசந்திரன், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக உள்ளதாகவும் நடுநிலை தவறியுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார், யார் வேட்பாளர் எனத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவர் பெயர் படிவத்தில் குறிப்பிடவில்லை. செந்தில் முருகன் பெயரைக் குறிப்பிடாமல் வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயர் மட்டும் படிவத்தில் உள்ளது. வேறு வேட்பாளரை முன் நிறுத்துவது குறித்து எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதர வேட்பாளர்கள் போட்டியிடும் உரிமையை தட்டிப் பறிக்க அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்மகன் ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதத்தை புறக்கணிக்கிப்பதாக தெரிவித்வர்கள், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பொறுத்திருந்து பாருங்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ்மகன் உசேன் டெல்லி சென்றுள்ள நிலையில் ஓ.பி.எஸ். டீம் அவருக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்து குற்றச்சாட்டு வைத்திருப்பதுதான் அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal