அமைச்சர்களின் செயல்பாடுகளே, வருகிற தேர்தல்களில் தி.மு.க.விற்கு எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும் என்று உண்மையான உடன் பிறப்புக்கள் உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு கவுன்சிலரை மண்டையில் ஓங்கி அடித்தார் அமைச்சர் கே.என்.நேரு, அந்த அதிர்வலைகளை அடங்குவதற்குள் கள்ளக்குறிச்சியில் உதயநிதியை வரவேற்க வந்த ஒரு தொண்டரையும் பின் மண்டையில் ஓங்கி அடித்தார் அமைச்சர் கே.என்.நேரு, ‘நாங்கள் பத்து வருடம் கழித்து தளபதியை அரியணையில் அமர்த்தியது அடிவாங்கத்தானா-..?’ என கொந்தளித்தனர் உடன் பிறப்புக்கள்!
இந்த நிலையில்தான், ஈரோடு இடைத்தேர்தலில் பணம் விநியோகம் செய்யப்படுவது குறித்து அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக முதல் ஆளாக தயரான திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அமைச்சர்கள் கொண்ட குழுவையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் எதிர்கட்சியான அதிமுக சார்பாக இன்னும் வேட்பாளர் அறிவிக்காமல் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பொறுத்து தேர்தலில் போட்டியிடுவது முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவும் இரட்டை இலை சின்னம் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கே ஆதரவு எனவும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதியாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர் ஈவிகேஎஸ் கலந்து கொண்டுள்ளனர். அப்படி ஒரு கூட்டம் நடைபெற்ற போது திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் முத்துசாமி, எ.வ.வேலு ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர். அப்போது மைக்கில் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது எ.வ.வேலுவும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசி கொண்டுள்ளனர்.
அந்த ஆடியோ மைக்கில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை பாஜக மாநில தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எல்லாரும் வந்துடுங்க சொல்லீட்டேன். மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் நீங்க அங்க இருங்க, சொல்லனும்னு நெனச்சேன். எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு Platinum Mahal , மத்தியானம் எல்லாரையும் கூப்பிட்டு பணம் குடுத்து செட்டில் பண்ணீட்டு. 30, 31, பிப்ரவரி 1ஆம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடுச்சுடனும்,
31 பூத்திலும் 10,000 பேரை ரெடி பண்ணனும். சென்னையில் நாளை முதலமைச்சர் பாராட்டு விழா நடத்துறாங்க. அதிகாரிகளுக்கு பாராட்டு வாட்ச் பரிசு அளிக்க உள்ளார். இப்போ புறப்பட்டு நான் திருச்சி போய், அங்கிருந்து சென்னை போய், அங்க கூட்டத்த முடுச்சுட்டு கோயமுத்தூர் போய் 31ஆம் தேதி இங்க வந்துருவேன். எல்லாத்தையும் முடுச்சுட்டேன். பழனி அண்ணன் வரதையும், மகேஷ் வந்தா பாப்போம், இல்ல நம்மலே பண்ணீடுவோம். நாசர் 5க்கு மேல வேண்டாம் வேண்டாம் என்கிறான். . அங்க இருக்க லோக்கல் ஆளுங்க, அண்ணங்கனாலே.. விடுதலை சிறுத்தைகள்.. அவங்க எல்லாம் கொடுக்கவில்லையோ பார்த்துக் கொள்ளுங்கள் என பேசியதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.