‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறக் கூடாது என நினைக்கும் பா.ஜ.க., அதே சமயம், அ.தி.மு.க.விலும் ‘பிங்கி பிங்கி பாங்கி’ விளையாடுவதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் இந்த பொதுக்குழு வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது. அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணையாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.
இதை தடுக்க ஒரே வழி அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வர வேண்டும். அல்லது பொதுக்குழு முடிவை தேர்தல் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டது, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது என்று எதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் கூட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடித்ததில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணையாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதாக மட்டுமே தகவல்கள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை இதில் மாற்றம் இல்லை. சமயத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில், தீர்ப்பு வந்தாலும், பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான். தேர்தல் ஆணையம் இந்த பொதுக்குழு முடிவை ஏற்கும் வரை, ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்ய உள்ளார். பெரும்பாலும் இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதை தடுக்கும் விதமாக எடப்பாடி இந்த முடிவை எடுத்துள்ளார். இன்று எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளனர். நேற்றுதான் தேர்தல் கமிட்டியை எடப்பாடி உருவாக்கிய நிலையில், இன்று அவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட உள்ளது.