இன்று 26,01,2023 வியாழக்கிழமை, 74 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

அதே போல், இன்று காலை 9.30 மணியளவில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே. வாசன் எம்.பி அவர்கள், சென்னை, அசோகா ரோடு, ஆழ்வார்பேட்டை, த.மா.கா தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தி, உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal