அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்னும் வேட்பாளரை ஏன் அறிவிக்கவில்லை என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிரடி காட்டியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தளவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல் தான் எடுத்த முடிவில் பின்வாங்காமல் இருக்கிறார். பா.ஜ.க.வும் ஓ.பி.எஸ்.ஸை வைத்து ‘அரசியல் கேம்’ விளையாடிப் பார்க்கிறது. ஆனாலும், அசராமல் எடப்பாடி தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை அறிவிப்பது உறுதி என்று கூறியநிலையில், 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடியார் நியமித்திருக்கிறார். அதாவது, ஓ.பி.எஸ். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செங்கோட்டையின் தலைமையிலான குழுவை அறிவித்திருக்கிறார்.

ஓ.பி.எஸ். அணி சார்பில் யாரை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, எடப்பாடி அணியை எதிர்த்து போட்டியிட யாரும் விரும்பவில்லை. இருந்தாலும் யாரையாவது ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஓ.பி.எஸ்., வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறாராம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal