ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இவர் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க.வினர் அடித்துக் கூறி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.