தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் உள்ள 1,028+ செவிலியர் காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ரூ.18,000 மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு இப்பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
மாவட்டத்தின் பெயர் பணியிடம்
செங்கல்பட்டு 45
கோயம்புத்தூர் 119
கள்ளக்குறிச்சி 54
காஞ்சிபுரம் –
மதுரை 86
நாகப்பட்டினம் 69
பெரம்பலூர் 61
புதுக்கோட்டை 114
சிவகங்கை 41
தென்காசி 10
தஞ்சாவூர் 140
திருச்சி 119
திருப்பத்தூர் 31
திருப்பூர் 126
விருதுநகர் 13
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அதிகபட்சம் 50 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் செவிலியர் பணியிடத்திற்கு வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்குச் செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் :
மாவட்டத்தில் பெயர் நாள்
செங்கல்பட்டு 27.01.2023
கோயம்புத்தூர் 30.01.2023
கள்ளக்குறிச்சி 25.01.2023
மதுரை 27.01.2023
நாகப்பட்டினம் 20.01.2023
பெரம்பலூர் 27.01.2023
புதுக்கோட்டை 27.01.2023
சிவகங்கை 27.01.2023
தென்காசி 19.01.2023
தஞ்சாவூர் 30.01.2023
திருச்சி 31.01.2023
திருப்பத்தூர் 25.01.2023
திருப்பூர் 30.01.2023
விருதுநகர் 25.01.2023
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையத்தளத்தில் பார்க்கவும்.