டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் அன்பரசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட 750 டாஸ்மாக் பார்களை ஏலத்தில் விடாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதனை செயல்படுத்த டாஸ்மாக் அதிகாரிகளுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக டாஸ்மாக் சங்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக சென்னை மண்டலத்திற்கு டெண்டர் நடத்த வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் கடை மேற்பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்ய முற்படுவதை நிறுத்த வேண்டும். அரசு கருவூலத்திற்கு போக வேண்டிய மது கூட உரிமை தொகையை திருப்பி விட முற்படும் டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த நான்கு மாதமாக மதுக்கூடங்கள் மூடி இருக்கும் காரணத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே ஐகோர்ட்டில் பார் உரிமையாளர்கள் அனைவரும் வழக்கு தொடர்ந்து 30 மாவட்டங்களில் மதுக்கூடங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை மண்டலத்தில் மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஏலம் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால். மீண்டும் சென்னை ஐகோர்ட்டை அணுக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal