தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக ஆளுங்கட்சியே சில சமயங்களில் தயங்கி வருகிறது.

இந்த நிலையில்தான், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவராக இருப்பவர் ஆரூர் டி.ரவி. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாலும் ஆரூர் டி.ரவி கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. காரணம், கோவை குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க. அலுவலகங்களிலும் பெட்ரோல் குண்டு விசப்பட்டு வருகிறது.

அதே போல் குண்டு துளைக்காத வாகனம் உள்பட சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 22 கமாண்டோ போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இசட் பிரிவு அதிகாரிகளும் தனியாக பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதற்காக மத்திய அரசு மாதந்தோறும் ரூ.16 லட்சம் செலவு செய்யும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal